பதிவு செய்த நாள்
04
மார்
2022
11:03
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, புளியம்பட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், கடந்த, 15ம் தேதி கணபதி ேஹாமத்துடன் திருவிழா துவங்கியது. கோவில் முன் கம்பம் நட்டு நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.நேற்றுமுன்தினம், மாரியம்மனுக்கும், சூலத்தேவருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து, மாவிளக்கு, பொங்கல் கொண்டு வந்து, பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.அதன்பின், மாலையில், பக்தர்கள் பூவோடு எடுத்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். நேற்று மஞ்சள் நீராடுதல், அம்மன் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று (4ம் தேதி) அபிேஷக பூஜைகள், அலங்கார தீபாராதனை நடக்கிறது.