பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா: பரண் அமைத்து காட்டு யானைகள் கண்காணிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2022 03:03
கூடலூர்: நீலகிரியில், பிரசித்திபெற்ற பொக்காபுரம் மாரியம்மன் கோவில் ஐந்து நாட்கள் திருவிழா 4ம் தேதி துவங்கியது; 8ம் தேதி வரை நடைபெறுகிறது. 7ம் தேதி இரவு 10:00 மணிக்கு மாரியம்மன் திருத்தேர் ஊர்வலம் நடக்கிறது. 8ம் தேதி காலை 8 45 மணிக்கு மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது. விழாவின் போது, காட்டு யானைகள், கோவில் வளாகத்துக்குள் நுழையும் அபாயம் உள்ளது. இதனை தடுக்கவும்; பக்தர்களால் வனத்தீ ஏற்படுவதைத் தடுக்கவும் சிங்கார வனத்துறை சார்பில், வன ஊழியர்கள் கோவில் ஒட்டி, இரண்டு இடங்களில் பரண் அமைத்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.