சிவகாசி பேச்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2022 03:03
சிவகாசி: சிவகாசி பேச்சியம்மன் கோயில் மாசி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றும் நாளில் சுவாமிக்கு பால் வண்ண அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து 10 நாட்களும் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெறும். விழாவின் சிறப்பு நிகழ்வாக 8 ம் நாளில் பால் குடம் ஊர்வலம், 9 வது நாளில் தலைக்கட்டு பொங்கல் சர்வமங்கள அலங்காரம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.