பதிவு செய்த நாள்
16
ஜூலை
2012
10:07
தென்காசி: பூலாங்குளம் செல்வவிநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. பூலாங்குளம் செல்வ விநாயகர் கோயில், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி, நவக்கிரக கோயிலில் திருப்பணிகள் நடந்தது. இதனையடுத்து கடந்த 14ம் தேதி யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சி துவங்கியது. அன்று காலையில் கணபதி பூஜை, நவக்கிரக பூஜை, அனுக்ஞை, புணயவாசனம், தேவதை ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. மாலையில் கணபதி பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், முதல் கால யாகசாலை பூஜை, யந்திர ஸ்தாபனம், தீபாராதனை நடந்தது. இரண்டாம் நாளான நேற்று காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, தேவதைக்கு காப்பு கட்டுதல், தேவதை ஹோமம், பூர்ணாகுதி, யாத்ராதானம், கும்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது. விநாயகர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு நறுமணப் பொருட்களால் மகாபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.மாலையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பக்தி சொற்பொழிவு நடந்தது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், முருக பக்தர் குழுவினர், அம்மன் பக்தர் குழுவினர், ஐயப்ப பக்தர் குழுவினர் செய்திருந்தனர்.