ஊட்டி: மாரியம்மன் திருவிழாவை கிராம மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
நீலகிரியில் படுகர் இன மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். பாரம்பரிய கலாச்சாரத்துடன் வாழ்ந்து வரும் மக்கள் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை, அந்தந்த கிராமங்களில் மாரியம்மன் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். நடப்பாண்டு விழாவையொட்டி நேற்று, மஞ்சூர் அருகே குந்தா தூனேரி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. தொடர்ந்து, 11:00 மணியளவில் நாராயணமூர்த்தி கோவிலிலிருந்து அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. பின், கிராம மக்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபட்டனர். ஆடல் பாடலுடன், மேளம் தாளம் முழங்க திரளான கிராம மக்கள் பங்கேற்றனர்.