வைகையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மார் 2022 01:03
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே வைகை கிராமத்தில் பழமை வாய்ந்த வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது.
இங்கு பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நேற்று இரவு 7 மணி அளவில் காப்பு கட்டும் உற்ஸவ விழா நடந்தது. கோயில் வளாகத்தில் கொடியேற்றும் வைபவம் முன்னதாக, மூலவருக்கு 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. வருகின்ற மார்ச் 18 வெள்ளிக் கிழமை அன்று காலை 7 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் விழா துவங்கி, வன்னிவிநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை திருவிளக்கு பூஜை அன்னதானம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர் ஆர்.வசவலிங்கம், வைகை கிராம பொதுமக்கள் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.