திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் பங்குனி திருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2022 08:03
திருச்சுழி : திருச்சுழி துணைமாலை அம்மன் சமேத திருமேனிநாதர் சுவாமி கோயில் பங்குனி பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி சுவாமி சன்னதிக்கு முன்பாக உள்ள கொடி மரத்தில் கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. யாகசாலை வேள்வி நடந்தது. தீபாராதனை காட்டப்பட்டு கொடியேற்றம் நடந்தது. தினமும் சுவாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 16ல் திருக்கல்யாணம், 17ல் தேரோட்டம் நடக்கிறது.