தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2022 03:03
தாயமங்கலம்: இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா வருகிற 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா வருடந்தோறும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்த விழாவின் போது மதுரை,அருப்புக்கோட்டை,விருதுநகர், சிவகங்கை,மானாமதுரை,இளையான்குடி, காரைக்குடி,திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து முடிகாணிக்கை,தீச்சட்டி,கரும்பு தொட்டில் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.இந்தாண்டுக்கான பங்குனி பொங்கல் விழா வருகிற 29ம் தேதி இரவு 10 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா அடுத்த மாதம் 8ஆம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற உள்ளது.விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான பொங்கல் விழா அடுத்த மாதம் 5ம் தேதியும் மறுநாள் 6ம் தேதி மின் விளக்கு அலங்காரங்களுடன் தேரோட்டமும் 7ம் தேதி பால்குட ஊர்வலமும் நடைபெற உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செட்டியார் செய்து வருகிறார். பங்குனி பொங்கல் விழாவை ஒட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.