திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான ரூ 1 கோடி நிலம் மீட்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2022 03:03
திருநெல்வேலி: திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான 2ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக இணை ஆணையர் தெரிவித்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடியில் உள்ளது. தனியார் பராமரிப்பில் உள்ள 2 ஏக்கர் 3 சென்ட் நன்செய் நிலத்தின் மதிப்பு ரூ ஒரு கோடி ஆகும். அறநிலையத்துறை அதிகாரிகள் அங்கு சென்று நிலத்தை அளவீடு செய்தனர். வரும் 11 ம் தேதி நிலத்தை முழுமையாக கைப்பற்றும் பணிகள் நடக்கும் என திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் குமரதுரை தெரிவித்தார். கோயில் நிலங்களை தாமாக முன்வந்து ஒப்படைக்காதவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.