திருத்தணி முருகன் கோவிலுக்கு, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். இன்று, வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை மற்றும் திருமண முகூர்த்த நாள் என்பதால், வழக்கத்திற்கு மாறாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் திரண்டனர். பொது வழியில், பக்தர்கள் மூன்று மணி நேரம் வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். அதே போல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள், இரண்டு மணி நேரம் வரிசையில் சென்று, மூலவரை தரிசித்தனர். திருத்தணி கூடுதல் எஸ்.பி., ஷுபம் திமான் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மலைக்கோவிலுக்கு, இருசக்கர வாகனங்கள் தவிர, மீதமுள்ள அனைத்து வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டதால், கோவில் நிர்வாகம் சார்பில், ஏழு பேருந்துகள் இயக்கப்பட்டன. முன்னதாக, இன்று அதிகாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், தங்க வேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.