திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவின் முதல் நாள் விழாவாக நேற்று விநாயகர் திருவிழா நடந்தது.
கோயிலில் வழக்கமாக பங்குனி திருவிழா கொடியேற்றத்திற்கு மறுநாள் 1ம் திருவிழாவில் தங்க குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய தெய்வானை வீதிஉலா நிகழ்ச்சி நடக்கும். இந்த ஆண்டு நேற்று விநாயகர் திருவிழா நடைபெற்றது. விநாயகருக்கு பூஜைகள் முடிந்து மூஞ்சுறு வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் புறப்பாடாகினார். நட்சத்திரத்தின்படி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொடியேற்றத்திற்கு மறுநாள் விநாயகர் திருவிழா வரும். கடந்த ஆண்டும் கொடியேற்றத்திற்கு மறுநாள் விநாயகர் திருவிழா நடைபெற்றது. இன்று (மார்ச் 10) முதல் மார்ச் 23 வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பார்.