விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2022 03:03
பந்தலூர்: பந்தலூர் அருகே அய்யங்கொல்லி, பாதிரிமூலா விநாயகர் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அய்யன்கொல்லி அருகே பாதிரிமூலா பகுதியில் விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. 9 ம் தேதி காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் முகூர்த்தக்கால் நடுதல் மற்றும் கொடியேற்றி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 12 ம் தேதி கங்கையில் இருந்து தீர்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்து வருதல் விக்னேஸ்வர பூஜை மற்றும் புண்ணிய வாசனை வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இரவு 10 மணி முதல் 12 மணிக்குள் விமான பிரதிஷ்டை அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. 13-ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜை மற்றும் சண்டிஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதுடன், 9-மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகள். கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகளை குருக்கள் புவனேஸ்வரன் தலைமையிலான குழுவினர் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா கருப்பையா, கோவில் கமிட்டி தலைவர் செல்லதுரை, ராஜேந்திரன், பொருளாளர்கள் சுகுமார் மற்றும் இதயன், விழா கமிட்டி தலைவர் ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.