சென்னை : காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், நான்காம் ஆண்டு ஆராதனை மகோற்சவம், புதுடில்லி தேவி காமாட்சி கோவிலில் நாளை நடக்கிறது.டில்லி காமகோடி காமாட்சி தியான கலாச்சார மையம் சார்பில், ஆண்டு தோறும் காஞ்சி காமகோடி பீடத்தின், 69வது பீடாதிபதி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை மகோற்சவம் சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, நான்காம் ஆண்டு ஆராதனை மகோற்சவம், புதுடில்லி தேவி காமாட்சி கோவிலில் நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு, 11ம் தேதி முதல் மகா ருத்ரயாகம் நடத்தப்பட்டது. இன்று மாலை 5:30 மணிக்கு உதக சாந்தியும்; அதை தொடர்ந்து உபநிஷத் பராயணமும் நடக்கிறது. ஆராதனை நாளான நாளை காலை 8:30 மணி முதல் விக்னேஷ்வர பூஜை, புண்ணியாவசனம், கலச ஸ்தாபனம், தச கலச பூஜை, ருத்ர ஜப அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.