இராணிப்பேட்டை: வாலாஜாப்பேட்டையில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்து புகழ்பெற்ற ஸ்தலமான காமாட்சி சமேத ஏகாம்பரநாதர் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி தேர்திருவிழா நடந்தது.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் சுமார் 800ஆண்டுகள் பழமைவாய்ந்து காமாட்சிசமேத ஏகாம்பரநாதர் கோயில் புகழ்பெற்ற தலமாக விளங்கி வருகிறது ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தையொட்டி 10நாள் விழாவாக பிரம்மோற்சவம் நடந்து வருகிறது .. இந்த ஆண்டு கோயிலில் இம்மாதம் 8ந்தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கி தினமும் காலை,மாலை இருவேளையும் மூலவர் ஏகாம்பரநாதர காமாட்சியம்பாள் இருவரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மேலும் சமேதராக உற்சவமூர்த்திகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், சூரிய பிரபை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர் . 8-ம் நாள் இன்று தேர்த்திருவிழா நடந்தது. தேரில் ஏகாம்பரநாதர், காமாட்சி அம்பாளுடன் சமேதராக அலங்கரிக்கப்பட்டு செண்டைமேளம் உள்ளிட்ட பலவித மேலதாளங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் ராஜவீதிகளில் வலம் வந்தனர். அப்போது பக்தர்கள் அரோகரா,ஆரோகரா என்று பரவசத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்துச்சென்றனர். ஆயிரகணக்கில் பக்தர்கள் சாமியை வழிபட்டுச்சென்றனர்.