மயிலம் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2022 12:03
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் பங்குனி உத்திரத்தையொட்டி, வள்ளி- தெய்வானையுடன் சமேதராக சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளிய தேரை அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலம் கோவிலில் நடந்த பங்குனி உத்திர பெருவிழாவில், வள்ளி- தெய்வானையுடன் சமேதராக சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளிய தேரை பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், அமைச்சர் மஸ்தான் ஆகியோர் தேரை வடம்பிடித்து துவக்கி வைத்தனர். தொடர்ந்து அரோகரா கோஷத்துடன் மயிலம் மலையின் மாடவீதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் வடம்பிடித்து தேரை இழுத்து வந்தது.. மேலும் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி காவடி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.