Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம் : ராகு, கேது பெயர்ச்சி பலன்.. ... கன்னி : ராகு, கேது பெயர்ச்சி பலன்.. ஆடம்பரத்தில் நாட்டம் கன்னி : ராகு, கேது பெயர்ச்சி பலன்.. ...
முதல் பக்கம் » ராகு கேது பெயர்ச்சி பலன் (8.10.2023 முதல் 26.4.2025 வரை)
சிம்மம் : ராகு, கேது பெயர்ச்சி பலன் .. மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்
எழுத்தின் அளவு:
சிம்மம் : ராகு, கேது பெயர்ச்சி பலன் .. மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

பதிவு செய்த நாள்

17 மார்
2022
02:03

மகம்: பிரச்னைகள் விலகும்

இந்த ராகு, கேது பெயர்ச்சி சிறப்பாக அமையும். இதுவரை இந்த கிரகங்கள் திருப்தியற்ற நிலையில் தான் இருந்தன. அதாவது ராகு 10ம் இடமான ரிஷபத்தில் இருந்து மனைவி வகையில் பிரச்னையையும், உங்கள் திறமை மற்றும் புகழில் பங்கத்தையும் கொடுத்திருப்பார். கேது 4ம் வீடான விருச்சிக ராசியில் இருந்து  உடல் உபாதைகளையும், பிள்ளைகளால் தொல்லைகளையும் தருவார். இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் விடைகொடுக்கும் காலம். கேது 3ம் இடமான துலாம் ராசிக்கு வந்து பல்வேறு நன்மைகளை தருவார். அதாவது இறை அருளையும், பொருள் உதவியையும் கொடுப்பார். உடல் உபாதைகளை குணமாக்குவார். ராகு 9ம் இடமான மேஷத்திற்கு மாறுகிறார். இதனால் காரியத்தில்  தடைகளை உருவாகலாம். இதற்காக கவலை கொள்ள தேவை இல்லை காரணம் அவரது 4,7,11ம் இடத்துப் பின்னோக்கிய பார்வைகள் சாதகமாக உள்ளன. இதன் மூலம் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம். இனி விரிவான நட்சத்திர பலனைக் காணலாம்
பொதுபலன்:                            
 கடவுளின் கருணை உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் கடந்த காலத்தைவிட மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய வீடு, மனை, வாகனம்  வாங்கலாம். 2023 ஏப். 22க்கு பிறகு  குடும்பத்தில் தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை ஏற்படும்.
தொழில்: பொருளாதார வளம் அதிகரிக்கும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும். புதிய வியாபாரம் அனுகூலத்தை கொடுக்கும். இரும்பு, அச்சு தொடர்பான தொழில்களும், தரகு, பழைய பொருட்களை வாங்கி விற்பது போன்றவை சிறந்து விளங்கும். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து  விடுபடுவர். குருவின் பார்வையால் பணவரவு கூடும்.  உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள். தவறை உணர்ந்து திருந்துவர்.  2023 ஏப்.22க்கு பிறகு தங்கம்,வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்

பணியாளர்கள்: போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும். தனியார் துறையில் பார்ப்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். இருப்பினும் குருவின் 7ம் இடத்துப் பார்வையால் நன்மை காண்பர். சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.  2023 ஏப். 22க்கு பிறகு எதிர்பாராத நன்மைகள் கிடைக்க வாய்ப்புண்டு. வக்கீல்களுக்கு தாங்கள் நடத்தும் வழக்குகள் சிறப்பாக இருக்கும். சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
.
கலைஞர்கள்:  புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். புகழ் கவுரவத்திற்கு பங்கம் வராது. அரசியல்வாதிகள்: சிறப்பான பலனைக் காண்பர். முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்புள்ளது
மாணவர்கள்: சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. குருவின் பார்வையால் கல்வி வளர்ச்சி உண்டாகும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். ஆசிரியர்களின் உதவி பயனுள்ளதாக அமையும்.
விவசாயம்: எள், கொள்ளு சோளம், கேழ்வரகு, தக்காளி போன்ற  பயிர்கள் மூலம் லாபத்தை காண்பர். புதிய சொத்து வாங்கும் வண்ணம் கைகூடும். வழக்கு விவகாரங்களில் முடிவு சாதகமாக அமைய வாய்ப்புண்டு. கால்நடை வளர்ப்பில் நல்ல வருமானத்தைப் பெறுவர்.
பெண்கள்:  ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். அக்கம் பக்கத்தினரின் தொல்லையில் இருந்து விடுபடுவர். உற்சாகமான நிலையை அடைவீர்கள். அபார ஆற்றல் பிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். பணிக்குச் செல்லும் பெண்கள் கோரிக்கைகளை கேட்டு பெறலாம். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 2023 ஏப். 22க்கு பிறகு திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும்.
உடல்நலம்: சிறப்பாக இருக்கும். வாயு தொடர்பான உபாதை பூரண குணம் அடையும்.
பரிகாரம்: காளியின் அருள் கிடைக்க அர்ச்சனை செய்யுங்கள்.அதிகாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுங்கள். ஏழைகளுக்கு ஆடை தானம் செய்யுங்கள். குறிப்பாக நீலம் மற்றும் பலவண்ண நிற துணிகளை கொடுத்து வாருங்கள்.
                           
பூரம் : கேட்ட வரம் கிடைக்கும்

இந்த ராகு, கேது பெயர்ச்சி சிறப்பாக அமையும். இதுவரை இந்த கிரகங்கள் திருப்தியற்ற நிலையில் தான் இருந்தன. அதாவது ராகு 10ம் இடமான ரிஷபத்தில் இருந்து மனைவி வகையில் பிரச்னையையும், உங்கள் திறமை மற்றும் புகழில் பங்கத்தையும் கொடுத்திருப்பார். கேது 4ம் வீடான விருச்சிக ராசியில் இருந்து  உடல் உபாதைகளையும், பிள்ளைகளால் தொல்லைகளையும் தருவார். இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் விடைகொடுக்கும் காலம். கேது 3ம் இடமான துலாம் ராசிக்கு வந்து பல்வேறு நன்மைகளை தருவார். அதாவது இறை அருளால் கேட்ட வரம் கிடைக்கும்.  பொருள் உதவியையும் கொடுப்பார். உடல் உபாதைகளை குணமாக்குவார். ராகு 9ம் இடமான மேஷத்திற்கு மாறுகிறார். இதனால் காரியத்தில்  தடைகளை உருவாகலாம். இதற்காக கவலை கொள்ள தேவை இல்லை காரணம் அவரது 4,7,11ம் இடத்துப் பின்னோக்கிய பார்வைகள் சாதகமாக உள்ளன. இதன் மூலம் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம். இனி விரிவான நட்சத்திர பலனைக் காணலாம்
பொதுபலன்:                            
இந்த பெயர்ச்சியில் முன்னேற்ற சம்பவங்கள் நடக்கும். பின்தங்கிய நிலை அடியோடு மறையும். தடைகள் விலகி எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பொருளாதார நிலை வளர்ச்சி அடையும்.  பிரச்னை வந்தாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.  வீட்டுக்கு தேவையான சகல வசதிகளையும் பெறுவீர்கள். சிலர் சற்று முயற்சி எடுத்து புதிய வீடு கட்டுவர். அல்லது தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடிபுகுவர். 2023 ஏப்.22 க்கு பிறகு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் எளிதில் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வகையில் இருந்த பிணக்குகள் மறையும்.
வியாபாரம்:  வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சிலர் வணிகம் விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். கூட்டுத்தொழிலில் நல்ல வளத்தைக் காணலாம். 2023 மார்ச் 29 க்கு பிறகு எதிலும் கூடுதல் முதலீடு செய்ய வேண்டாம். அறிவை பயன்படுத்தி முன்னேற வழி காண்பது நல்லது.

பணியாளர்கள்: போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் மேன்மை காண்பர். இதுவரை இருந்த பின்தங்கிய நிலை மறையும். வேலைப்பளு குறையும். விருப்பமான இடமாற்றத்தை முயற்சி செய்து பெற்று விடவும் .2023 ஏப்.22க்கு பிறகு உங்கள் ஆற்றல் மேம்படும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். சிலர் பக்கத்தொழில் செய்து, வருமானம் காண்பர்.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். 2023 ஏப். 22க்கு பிறகு அரசிடம் இருந்து பாராட்டு, விருது  கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: செல்வாக்குடன் திகழ்வர்.  எதிர்பார்த்த பதவி கிடைக்கும். பணச்செழிப்பிற்கு குறைவிருக்காது.
மாணவர்கள்: சிறப்பான பலனைக் காண்பர். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.  சிலருக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும்.
விவசாயிகள்: முன்னேற்றம் காண்பர். பாசி பயறு நெல், எள், உளுந்து, கொள்ளு, துவரை, கொண்டைக்கடலை மற்றும் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூலை பார்க்கலாம். சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்குவர். கூலி வேலை செய்பவர்கள் நல்ல வருமானத்தைக் காண்பர். வழக்கு விவகாரத்தில் முடிவு  சாதகமாக இருக்கும். தீர்ப்பு உங்கள் பக்கம் அமையலாம். கைதொழில் செய்பவர்கள் மனநிம்மதியுடன் காணப்படுவர்.
பெண்கள்: ஆன்மிக சிந்தனையுடன் செயல்படுவர். தெய்வ அனுகூலம் கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் பற்றி பேச்சு சிறப்பாக அமையும். பிறந்த வீட்டில் இருந்து எதிர்பார்த்த சொத்துகள் கிடைக்க வாய்ப்புண்டு. வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைக் காண்பர். சுயதொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு வருமானம் உயரும்.
உடல் நலம்:  சிறப்பாக இருக்கும். வாகன பயணத்தில் சீரான வேகத்தை பின்பற்றவும்.
பரிகாரம்- பத்திரகாளியம்மனுக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றுங்கள். பாம்பு புற்றுக்கு பால் ஊற்றலாம்.  கணவரை இழந்து தவிக்கும் பெண்களுக்கும் இயன்ற உதவியை செய்யுங்கள்.  

உத்திரம் 1-ம் பாதம்: உறவினரால் நன்மை

இந்த ராகு, கேது பெயர்ச்சி சிறப்பாக அமையும். இதுவரை இந்த கிரகங்கள் திருப்தியற்ற நிலையில் தான் இருந்தன. அதாவது ராகு 10ம் இடமான ரிஷபத்தில் இருந்து மனைவி வகையில் பிரச்னையையும், உங்கள் திறமை மற்றும் புகழில் பங்கத்தையும் கொடுத்திருப்பார். கேது 4ம் வீடான விருச்சிக ராசியில் இருந்து  உடல் உபாதைகளையும், பிள்ளைகளால் தொல்லைகளையும் தருவார். இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் விடைகொடுக்கும் காலம். கேது 3ம் இடமான துலாம் ராசிக்கு வந்து பல்வேறு நன்மைகளை தருவார். அதாவது இறை அருளையும், பொருள் உதவியையும் கொடுப்பார். உடல் உபாதைகளை குணமாக்குவார். ராகு 9ம் இடமான மேஷத்திற்கு மாறுகிறார். இதனால் காரியத்தில்  தடைகளை உருவாகலாம். இதற்காக கவலை கொள்ள தேவை இல்லை காரணம் அவரது 4,7,11ம் இடத்துப் பின்னோக்கிய பார்வைகள் சாதகமாக உள்ளன. இதன் மூலம் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம். இனி விரிவான நட்சத்திர பலனைக் காணலாம்
பொதுபலன்:  
இந்த பெயர்ச்சியால் எண்ணற்ற நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். பக்தி எண்ணம் அதிகரிக்கும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் காண்பீர்கள். மேலும் குருவின் பார்வையால் ஆற்றல் மேம்படும். மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். 2023 ஏப். 22 க்கு பிறகு உங்கள் மீதான அவப்பெயர் அடியோடு மறையும். புதிய வீடு கட்ட வாய்ப்புண்டு. அல்லது வசதியான வீட்டுக்கு குடிபுகுவர். தடைபட்ட திருமணம் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். உறவினர் வகையில் அனுகூலம் பிறக்கும்.
வியாபாரிகள்: வியாபார வளர்ச்சிக்கான வழிகள் கிடைக்கும்.புதிய தொழில் தொடங்கலாம். சிலர் வணிகம் விஷயமாக வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்புண்டு. கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். கூட்டுத்தொழிலில் நல்ல வளத்தைக் காணலாம். தரகு, கமிஷன் தொழிலில் பணவரவு
அதிகரிக்கும்.

பணியாளர்கள்: வேலைபளு குறையும். இதுவரை இருந்த பின்தங்கிய நிலை மறையும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிலர் இழந்த பதவியை மீண்டும் பெறுவர். இடமாற்ற பீதி மறையும். போலீஸ் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள்  உன்னத நிலையை அடைவர். விருப்பமான இடமாற்றத்தை கேட்டுப் பெறவும்.  சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். சிலருக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம்.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். பரிசு, பாராட்டு, விருது போன்றவை கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: எதிர்பார்த்த பதவி கிடைக்கும். தொண்டர்களுக்காக செலவு செய்ய நேரிடும். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.
மாணவர்கள்:  முன்னேற்றத்திற்கு வழிகாண்பர் .கல்வியில் வளர்ச்சியடைவர். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.  
விவசாயிகள்: பணி சிறப்பாக நடக்கும். நெல், நிலக்கடலை, கேழ்வரகு, எள் போன்ற தானியங்கள் சிறப்பான மகசூலை கொடுக்கும். புதிய நிலம் வாங்கலாம். விவசாயக் கூலி வேலை செய்பவர்கள் நல்ல வருமானத்தைக் காண்பர். வழக்கு விவகாரங்கள் சாதகமான முடிவு கிடைக்கும். தீர்ப்பு உங்கள் பக்கம் அமையலாம்.
பெண்கள்: மனதில் உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பிள்ளைகள் வகையில் இருந்த பிரச்னை மறையும். அவர்கள் வகையில் நற்பலன் கிடைக்க பெறலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். மனம் போல புத்தாடை அணிகலன்கள் சேர வாய்ப்புண்டு. பிறந்த வீட்டில் இருந்து உதவி கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். தோழிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு அரசின் சலுகை கிடைக்கும்.
உடல் நலம்: மருத்துவச் செலவு குறையும். நீண்ட நாள் நோய்கள் கூட குணமாகும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வீடு திரும்புவர்.
பரிகாரம்: ஏழைகளுக்கு இயன்ற தானம் செய்யுங்கள். முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ராகு காலத்தில் துர்க்கை, பைரவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். குலதெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.

 
மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் (8.10.2023 முதல் 26.4.2025 வரை) »
temple news
அசுவினி: முயற்சி வெற்றி பெறும்உங்கள் ஜென்ம ராசியில் இதுவரை சஞ்சரித்த ராகு 12ம் இடமான மீன ராசியிலும், ... மேலும்
 
temple news
கார்த்திகை;  கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ராகு கார்த்திகை முதல் பாதத்தினருக்கு ஜென்ம ராகுவாகவும், 2,3,4 ம் ... மேலும்
 
temple news
மிருக சீரிடம்: கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மிருகசீரிடம் 1 2 ம் பாதத்தினருக்கு விரய ராகுவாகவும், 3,4 ம் ... மேலும்
 
temple news
புனர்பூசம்: புதிய தொழில் தொடங்குவீர்கள்குருபகவானின் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த உங்களில் 1,2,3 ம் ... மேலும்
 
temple news
மகம்: எச்சரிக்கை அவசியம்கேது பகவானை நட்சத்திர நாதனாகவும் சூரியனை ராசி நாதனாகவும் கொண்ட உங்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar