கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயில் பங்குனி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2022 05:03
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயில் பங்குனி உற்சவ விழாவில் தேரோட்டம் நடைபெற்றது.
கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயில் பங்குனி உற்சவ திருவிழா கடந்த 1ம் தேதி அழகிய நாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.விழா நாள்களின் போது சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்திற்காக நேற்று மாலை 4:00 மணிக்கு சர்வ அலங்காரங்களுடன் சாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.தேர் 4 மாட வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது.பின்னர் சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.இதில் கட்டிக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இன்று19ம் தேதி மாலை 5:00 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்தில் முத்தனேந்தல் வைகை ஆற்றில் நீராடி செல்லும் விழா நடைபெற உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை கண்டிக்கும் கிராமத்தினர் செய்திருந்தனர்.