Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கட்டிக்குளம் சூட்டுக்கோல் ராமலிங்க ... திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

19 மார்
2022
05:03

தொண்டாமுத்தூர்: பூண்டி வெள்ளியங்கிரி கோவிலில், பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள, தென்கைலாயம் என அழைக்கப்படும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா, கடந்த, 14ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. 5 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில், நாள்தோறும் காலையும், மாலையும் வேள்வி பூஜை, திருவீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் இரவு, வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

நேற்று காலை, 8:00 மணிக்கு, நடராஜர் அபிஷேக தரிசன காட்சி நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான, தேரோட்டம், நேற்று மாலை, 5:00 மணிக்கு நடந்தது‌. அலங்கரிக்கப்பட்ட தேரில், வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மன் எழுந்தருளினர். பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், திருத்தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். பக்தர்கள் படைசூழ, திருத்தேரை வடம் பிடித்து, கோவிலை சுற்றி வந்து மீண்டும் நிலையில் நிறுத்தப்பட்டது. அதன்பின், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கொடிக்கம்பத்தில் இருந்து கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு மலைமீதுள்ள நுாபுர கங்கை ... மேலும்
 
temple news
வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷம் சுக்கிரவார பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இது சிவபெருமானுக்கு ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், புகழ்பெற்ற பாரம்பரிய நிகழ்வான பரத மிலாப் லீலா ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடம் நடத்தும் ஹிந்து சமய மன்றத்தின் உதவியுடன் படித்து பட்டம் பெற்ற ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெறவுள்ள 10-வது தீபோத்ஸவ விழாவை முன்னிட்டு, சரயு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar