பெரியகுளம்: பெரியகுளம் வடகரை பகவதி அம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது.
பெரியகுளம் வடகரை மலைமேல் வைத்தியநாத சுவாமி கோயிலின் உப கோயிலான பகவதி அம்மன் கோவில் மாசி, பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது. பகவதி அம்மன் பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களை வழங்கி வருவதால், ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து வருகின்றனர். கோயிலில் பக்தர்கள் பால்குடம், மாவிளக்கு,முளைப்பாரி, தீச்சட்டி எடுத்து அம்மனை வழிபடுகின்றனர்.ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. மார்ச் 8 ல் சாட்டுதல் நிகழ்ச்சியும், மார்ச் 14ல் திருவிழா துவங்கியது. மார்ச் 23 வரை 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. தினமும் அம்மன் அன்னபட்சி காலை சிம்மம் புஷ்பம் சட்டத் தேர் மின் விளக்கு அலங்காரத்தில் வீதி உலா நடந்து வருகிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் நரசிம்மன் மற்றும் பக்தர்கள் செய்துவருகின்றனர்.