தென்காசி : இலஞ்சி என்னும் தலத்தில் சித்ரா நதி தீர்த்தத்திதல் கபிலர், காசிபர், துருவாசர் ஆகிய மும்முனிவர்களின் ஐயப்பாட்டை நீக்கி அன்னார்கள் வேண்டிக் கொண்டதிற்கிணங்க இத்தலத்தில் ‘இலஞ்சி குமாரராக’ முருகப் பெருமான் வள்ளி,தேசசேன சமேதராக எழுந்தருளி காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். இக்கோயிலில் நாளை கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறவிருக்கிறது. விழானை முன்னிட்டு, இன்று (20ம் தேதி) காலை விக்னேஸ்வர பூஜையுடன் நான்காம் காலயாக பூஜை நடைபெற்றது. நாளை காலை 6.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, பூர்ணாஹீதி பிரதான, தீபாராதனை, கலசம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 9.45 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 6.00 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவில் திருப்பரங்குன்றம் ராஜா பட்டர், பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், கோயில் அர்ச்சகர்கள் பால சுப்ரமணிய பட்டர், சுந்தர பட்டர் ஆகியோர் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் செய்கின்றனர்.