மயிலாடுதுறை: திருக்கடையூரில் இன்று தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடைபெற்ற ஏழு கோவில்களின் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்
திருக்கடையூரில் அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது அதனை முன்னிட்டுசுற்றுக் கோயில்கள் என்று அழைக்கப்படும் இயமன் பூஜித்த ஆனந்தவல்லி சமேத கால ஈஸ்வரர், 4 மாட வீதிகளிலும் அமைந்துள்ள ஐந்து விநாயகர் கோவில்கள், பிடாரி அம்மன் கோவில் உள்ளிட்ட ஏழு கோவில்களுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடத்தப்பட்டது இன்று காலை 9 மணிக்கு நான்காம் காலயாகசாலை பூஜைகள் முடி உடைந்து பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது அதனையடுத்து கடன்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமான கலசங்களை அடைந்தது தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் அனைத்து கோவில்களுக்கும் ஒன்றன்பின் ஒன்றாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. யாகசாலை பூஜை மற்றும் கும்பாபிஷேகத்தை ராமலிங்கம், கணேஷ், மகேஷ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்கும்பாபிஷேகத்தில் தர்மபுரம் ஆதீன தென்மண்டல கட்டளை திருஞானசம்பந்தர் தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் .