மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2022 06:03
தேவதானப்பட்டி: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் 60 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தேவதானப்பட்டியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் மஞ்சளாறு ஆற்றங்கரையில் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இங்கு அம்மன் விக்ரகம் கிடையாது அடைக்கப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடந்து வருகிறது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக பிரசித்திப்பெற்ற கோயிலாகும். மாசித் திருவிழா கோலாகலமாக நடந்தது. வருவாய் பாதிப்பு: கோயிலுக்குச் சொந்தமான 60 ஏக்கர் நன்செய் மற்றும் புன்செய் நிலத்தில், ஆண்டுக்கு ரூ 30 லட்சம் கோவிலுக்கு வருவாய் கிடைத்து வந்தது. இந்நிலையில் சில ஆண்டுகளாக குத்தகைதாரர்கள் உள் குத்தகைக்கு விட்டு, கோயிலுக்கு பணம் செலுத்துவது இல்லை. பல ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் மூன்று கால பூஜை மற்றும் நிர்வாக செலவிற்கு கோயில் நிர்வாகம் சிரமப்படுகிறது. ஆக்கிரமிப்பு நிலங்கள் மற்றும் உள்குத்தகை நிலங்களை மீட்பதற்கு அறநிலையத்துறை நிர்வாகம் முன்வர வேண்டும்.