பதிவு செய்த நாள்
24
மார்
2022
10:03
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே ராவுத்துக்கொல்லனூர் மலை அடிவாரத்தில் உள்ள சஞ்சீவி பண்ணாரி அம்மன் கோயிலில், 49ம் ஆண்டு பூக்குண்ட திருவிழா நடந்தது.
கடந்த, 14ம் தேதி கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து பூச்சாட்டுதல், கம்பம் நடுதல் ஆகியன நடந்தன. 21ம் தேதி சஞ்சீவி வனத்தீர்த்தம் கொண்டு வருதல், சக்தி கரகம் அழைத்தல், குண்டம் திறப்பது, அக்னி குண்டத்தில் அக்னி ஏற்படுத்துதல் உள்ளிட்டவை நடந்தன. நேற்று முன்தினம் காலை, 5:00 மணிக்கு சக்தி கரகம் அழைத்தல், தொடர்ந்து குண்டம் இறங்குதல், பூவோடு எடுத்தல், அபிஷேக அலங்கார பூஜை, அன்னதானம் நடந்தது. நேற்று காலை, 11:00 மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது. இன்று காலை, 11:00 மணிக்கு மஞ்சள் நீராடுதல் நடக்கிறது. வரும் திங்கட்கிழமை காலை, 10:00 மணிக்கு மறுபூஜை இரவு, 7:00 மணிக்கு காத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் வரவு, செலவு தணிக்கை செய்தல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.