பதிவு செய்த நாள்
26
மார்
2022
12:03
மேட்டுப்பாளையம்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு, சிறப்பு அபிஷேக பூஜை செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர், தேவி கருமாரியம்மன், காலபைரவர் உட்பட பல்வேறு சுவாமிகளின் சன்னதிகள் உள்ளன. நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக பால், தயிர், தேன், சந்தனம், பன்னீர், விபூதி மற்றும் வாசனை திரவியங்களால், காலபைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை அடுத்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.