கேரளாவின் ராஜராஜேஸ்வரி கோவிலில் மாஜி முதல்வர் குமாரசாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2022 03:03
கேரளா கண்ணுாரில் உள்ள புராதன ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவிலில், முன்னாள் முதல்வர் குமாரசாமி, சென்று சாமி தரிசனம் செய்தார்.ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று கேரளாவின் கண்ணுாருக்கு சென்றார்.
அங்கு, தலிபரம்பதா கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து, சிறப்பு குறித்து கேட்டறிந்தார். சன்னிதானத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.பின் அவர் கூறியதாவது:பிரசாந்தமான சூழலில் ராஜராஜேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. நம் நாட்டின் 108 புராதன சிவாலயங்களில் இதுவும் ஒன்று. ஸ்ரீராமனே இங்கு வந்து ராஜராஜேஸ்வரி சுவாமிக்கு பூஜை செய்ததாக வரலாறு கூறுகிறது.இத்தகைய புண்ணிய தலத்தில் சிவ தரிசனம் செய்திருப்பது, எனக்கு கிடைத்த மஹா பாக்கியம்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -