பழநியில் குறையாத பக்தர்கள் கூட்டம்: காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2022 07:03
பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. பழநியில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்த காவடி எடுத்து வந்து பழநி மலைக்கோயிலில் செலுத்துவது ஐதீகம்.
இன்று விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. மேலும் வெளி மாவட்ட, மாநிலத்திலிருந்து வந்த வண்ணம் உள்ளனர். இதனால் பழநி மலைக்கோயில், அடிவாரம், சன்னதி வீதி, கிரி வீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் இருந்தது. கோயில் பொது தரிசன கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் நிரம்பியது. வின்ச், ரோப் கார் வரிசையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. பொது தரிசனத்தில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஜவகர் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குளத்துரோடு ஜவகர் வீதி பகுதிகளில் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். காலை நேரத்தில் வெளியூர் செல்ல பஸ் ஸ்டாண்டில் போதுமான பஸ் இல்லாததால் அவதிப்பட்டனர்.