காளஹஸ்தி சிவன் கோயில் அன்னதான திட்டத்திற்கு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கொடுத்த பக்தர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2022 10:03
ஸ்ரீ காளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அன்னதான திட்டத்திற்கு ஒரு லட்சத்து 11 ஆயிரம் காணிக்கையாக பக்தர் கொடுத்தார்.
தெலங்கானா மாநிலம் கம்மம் பகுதியை சேர்ந்த மானுகொன்ட. ராம் மோகன் என்ற பக்தர் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் நடக்கும் நித்திய அன்னதான திட்டத்திற்காக ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 116 ரூபாய்க்கான காசோலையை ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் நிர்வாக அதிகாரி பெத்தி. ராஜுவிடம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து ராம்மோகன் குடும்பத்தாருக்கு கோயிலில் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்ததோடு கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்த பின்னர் கோயில் வளாகத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் வேத பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்யப்பட்டதோடு கோயில் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.