திருக்குறுங்குடி: திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவத்தின் நிறைவு நாளான நேற்று நம்பியாற்றில் தீர்த்தவாரி நடந்தது.
108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவ திருவிழா 11 நாட்கள் விமரிசையாக நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. பிரம்மோற்ஸவ விழாவின் நிறைவு நாளான நேற்று காலை10.30 மணிக்கு ராமானுஜ ஜீயர் முன்னிலையில் நம்பியாற்றில் தீர்த்தவாரி நடந்தது. பெருமாள் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம், தீபாராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து பெருமாள் மண்டபத்தில் எழுந்தருளினார். இரவில் வைஷ்ணவர்களுக்கு விடைசாதித்தல் , ராமானுஜ ஜீயருக்கு ராஜவரிசை மரியாதை, தீர்த்தவாரி விநியோகம், கோஷ்டி நடந்தது . ஏற்பாடுகளை பவர் ஏஜன்ட் பரமசிவன் தலைமையில் ஊழியர்கள் , செய்திருந்தனர்.