நெல்லை டவுன் கரியமாணிக்கபெருமாள் கோயிலில் பங்குனி திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2022 01:03
திருநெல்வேலி: நெல்லை டவுன் கரியமாணிக்கப் பெருமாள் கோயில் பங்குனி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. 11 நாட்கள் பங்குனி பெருவிழாநடக்கிறது.4ம் நாளில் யாகசாலை ஹோமம் மற்றும் ஆராதனம், காலை 8 மணிக்கு தோளுக்கினியன் வாகனத்தில் வீதியுலா, திருமஞ்சனம், யாகசாலை ஹோமம், ஆராதனம், இரவு 8 மணிக்கு சேஷவாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. திருவிழாக்களில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 10ம் நாளான 6ம் தேதி காலையில் யாகசாலை ஹோமம், ஆராதனம், காலை 6.45 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. இரவு புஷ்பபல்லக்கு வீதியுலாநடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் அதிகாரி, அர்ச்சகர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.