திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த திருப்பாலப்பந்தல் அருள்மிகு மத்திய நாதேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் உழவாரப் பணி மேற்கொண்டனர்.
திருக்கோவிலூர் அடுத்த திருப்பாலப்பந்தலில் மிகவும் பழமை வாய்ந்த மத்திய நாதேஸ்வரர் கோவில் உள்ளது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவிலின் உழவாரப்பணி மேற்கொள்ள அழைப்பு விடுத்தனர். விழுப்புரம் ஆரூரர் உழவாரப்பணி திருக்கூட்டம் முத்துசாமி ஆசிரியர் தலைமையிலான உழவாரப்பணி குழுவினர் கோவில் முழுவதையும் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். கோவில் பணியாளர் தூய்மைப்படுத்தும் பணியை முன்னின்று செய்தார்.