கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் கால்நாட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2022 02:03
கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பக வல்லி அம்மன் கோயிலில் பங்குனி பெருந்திருவிழா ஏப்.5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி நேற்று கால்நாட்டு விழா நடந்தது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் பங்குனி ருந்திருவிழா ஏப்.5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதை முன்னிட்டு, நேற்று கோயில் முன் கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது. கால்நாட்டு நிகழ்ச்சியையொட்டி, நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடந்தது. பின்னர், சுவாமி , அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. தொர்ந்து, 9 மணிக்கு கால்நாட்டு வைபவத்தை முன்னிட்டு, அம்மன் சன்னிதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையடுத்து, பந்தல்கால் ரத வீதி வழியாக எடுத்துவரப்பட்டு, கோயில் முன் பங்குனித் திருவிழா கால்நாட்டு வைபவம் நடந்தது. இக்கோயிலின் பங்குனி திருவிழா ஏப்ரல் 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 13ம் தேதி தேரோட்டமும், 14ம் தேதி தீர்த்தவாரியும், 15ம் தேதி தெப்பத் திருவிழாவும் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி நாகராஜன், கோயில் ஆய்வாளர் சிவகலைபிரியா மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.