சிறுவாபுரி முருகனை 3 மணி நேரம் காத்திருந்து தரிசித்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2026 05:01
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, முருகனை தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை அருகே சின்னம்பேடு கிராமத்தில், சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. செவ்வாய், ஞாயிறு மற்றும் விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரி முருகனை தரிசிப்பது வழக்கம். இன்று செவ்வாய்க்கிழமை என்பதால், அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு குவிந்தனர். இதனால், சிறுவாபுரி கோவில் அமைந்துள்ள பகுதி முழுதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், மூன்று மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து, ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த முருகனை தரிசித்து சென்றனர். கூட்டத்தை சீர்படுத்தும் பணியில், கோவில் நிர்வாகத்தினரும், ஆரணி போலீசாரும் ஈடுபட்டனர்.