பதிவு செய்த நாள்
02
ஏப்
2022
04:04
தஞ்சாவூர்: கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் ராமநவமி விழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் துவங்கியது.
தஞ்சாவூரை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரால் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான திருக்கோவிலாகும். இக்கோவிலில் ராமர், சீதாதேவி பட்டாபிஷேக திருக்கோலத்தில் காட்சி அளிப்பதால் தென்னக அயோத்தி என்றழைக்கப்படுகிறது. சிறப்புகள் பல பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்விழா இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது கொடிமரம் அருகே ராமன், லெட்சுமணன், சீதாதேவி, அனுமன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். தொடர்ந்து 3-ம் தேதி காலை பல்லக்கும், திருமஞ்சனமும், இரவு வெள்ளி சூரியபிரபையில் வாகன புறப்பாடும், 4ம் தேதி இரவு தங்க சேஷவாகன புறப்பாடும், 5ம் தேதி இரவு தங்க கருட சேவையும், ஓலைச்சப்பரமும், 6ம் தேதி இரவு வெள்ளி ஹனுமந்த வாகன புறப்பாடும், 7ம் தேதி இரவு யானை வாகன புறப்பாடும், 8ம் தேதி இரவு புன்னை மர வாகன புறப்பாடும், 9ம் தேதி காலை வெண்ணைத்தாழி அலங்காரமும், முக்கிய நிகழ்வான 10ம் தேதி காலை தேரோட்டமும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து 11ம் தேதி காலை திருமஞ்சனத்துடன் விடையாற்றி விழா நடைபெறுகிறது.