பதிவு செய்த நாள்
03
ஏப்
2022
08:04
பரமக்குடி: பரமக்குடி அனுமார் கோதண்டராமர் சாமி கோயிலில் ராமநவமி விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இக்கோயிலில் ராமர், சீதை, லட்சுமணன் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். மேலும் அருகில் புளியமரம் மூலவராக இருந்து ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறார். இங்கு நேற்று காலை 10:00 மணிக்கு கருட கொடி ஏற்றப்பட்டு ராமநவமி விழா துவங்கியது. குரங்கு தினமும் அபிஷேக ஆராதனைகளும், இரவு ராமர் கருடன், அனுமான், சிம்மம், சேஷ, அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வருவார். தொடர்ந்து தசரத சக்கரவர்த்தி நடத்திய புத்திர காமேஷ்டி யாகத்தால், ராமர், பரதன், லட்சுமணன், சத்ருக்கனன் பிறந்தனர். இதன்படி ஏப்., 9 அன்று மாலை 5:00 மணிக்கு புத்திரகாமேஷ்டி யாகம், மறுநாள் காலை ராமநவமி விழா நடைபெறும். ஏப். 12 அன்று மதியம் 12:00 மணிக்கு மேல் ராமர், சீதை திருக்கல்யாண வைபவம் நடக்க உள்ளது.
*இதேபோல் பரமக்குடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் ராமநவமி விழாவையொட்டி, ஏப்., 9 அன்று காலை மூலவர், உற்சவருக்கு 13 வகையான அபிஷேகம் நடக்கும். இன்று காலை 8:30 மணிக்கு புத்திரகாமேஷ்டி யாகம், மறுநாள் காலை 6:00 மணிக்கு ஸ்ரீ ராமநவமி விழா மற்றும் ஏகதின லட்சார்ச்சனை நடக்க உள்ளது.