பதிவு செய்த நாள்
03
ஏப்
2022
08:04
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்திலுள்ள பல்வேறு கோயில்களில், தெலுங்கு வருட பிறப்பையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன.
நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் அதிகாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில், அதிகாலை நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. கோவில் வளாகத்தில் உள்ள ஆண்டாள், ஆழ்வார்கள், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பாலமலையில் உள்ள ரங்கநாதர் கோவில், பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள சொக்கலிங்கேஸ்வரர் கோவில், ஜோதிபுரம், பாப்பநாயக்கன் பாளையம் ஆகிய இடங்களில் உள்ள கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் கோவில், இடிகரையில் உள்ள பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவில், நாயக்கனூரில் உள்ள லட்சுமி நரசிங்கப்பெருமாள் கோவில் ஆகியவற்றில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள அங்காளம்மன் கோவில், பட்டாளம்மன் கோவில், மாகாளியம்மன் கோவில், சந்தைப்பேட்டை மாரியம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.