அன்னூர்: கெம்பநாயக்கன்பாளையம், கருப்பசாமி கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கெம்பநாயக்கன்பாளையத்தில் காடைகுல முன்னோர்களால் பல தலைமுறைகளாக வழிபாடு செய்துவந்த நத்தக்காட்டு கருப்பராயன் கோவிலில், பிள்ளையார், கருப்பராயன், கொழந்தூர் அம்மன், கன்னிமார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருப்பணி செய்யப்பட்டன. இதையடுத்து, கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் திருவிளக்கு வழிபாடுடன் துவங்கியது. மாலையில் தமிழ் முறைப்படி, முதற்கால வேள்வி பூஜை நடந்தது. நேற்று அதிகாலையில் இரண்டாம் கால வேள்வி பூஜையும், காலை 7:30 மணிக்கு கருப்பராயன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது, இதைத்தொடர்ந்து பேரொளி வழிபாடும், அன்னதானமும் நடந்தது. பேரூர் சாந்தலிங்கர் அருள் நெறி மன்றத்தினர் தமிழ் முறைப்படி வேள்வி வழிபாடு செய்தனர். சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.