சக்தி முனீஸ்வரன் கோவில் தேர் திருவிழா: பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2022 10:04
கூடலூர்: கூடலூர் ஸ்ரீ சக்தி முனீஸ்வரன் கோவில், பிரதிஷ்டா தினதேர் திருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது. அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது; 5:00 மணிக்கு கணபதி ; 7:00 மணிக்கு உஷபூஜை; 7:30 மணிக்கு கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு பூஜைகளையும் 10:30 மணிக்கு மதிய பூஜை நடந்தது. மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள்; 6:30 மணிக்கு தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.
நேற்று, 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமத்துடன் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை கோவிலில் இருந்து திருத்தேர் ஊர்வலம் செண்டை மேளம் இசையுடன் துவங்கியது. முனீஸ்வரர் மற்றும் சிவன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தேர் நகரின் முக்கிய வழியாக விநாயகர் கோவில் சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.