கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே செடிப்பட்டி ஆத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவிழாவில் முன்னதாக கடந்த மார்ச் 27 கம்பம் ஊண்டுதல் மற்றும் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினசரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை மேளதாளம் முழங்க பூசாரிகள் தீச்சட்டி எடுத்தல் மற்றும் அதனை தொடர்ந்து பக்தர்கள் தீச்சட்டி எடுத்தல், பால் குடம், கோவிலைச் சுற்றி அங்கப் பிரதட்சணம், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று ( ஏப்ரல் 3) மஞ்சள் நீராட்டம் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.