மேலூர்: சூரக்குண்டு கொட்டாக்கருப்பு, தொட்டிச்சி அம்மன், வீரணன் சுவாமி கோயில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. மூன்றாம் கால பூஜையின் முடிவில் நேற்று கும்பத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சூரக்குண்டு, மேலார் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.