மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கு ஒப்புதல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2022 05:04
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிேஷக திருப்பணிகளுக்கு வழிகாட்டி குழு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து இம்மாதத்திற்குள் பணிகள் துவங்க உள்ளன.
இதோடு வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணியும் நடக்க உள்ளது.இக்கோயிலில் 2018 பிப்.2ல் ஏற்பட்ட தீ விபத்தில் வீரவசந்தராயர் மண்டபம் சேதமடைந்தது. சீரமைப்பு பணிக்காக ரூ.11.40 கோடியும், கற்கள் வெட்டி எடுத்து வர ரூ.6.40 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பணிகளை மேற்கொள்ள திருப்பூர் ஒப்பந்ததாரர் வேல்முருகன் டெண்டர் எடுத்துள்ளார். கடந்த வாரம் சென்னையில் கூடிய அறநிலையத்துறை குழு ஒப்புதல் அளித்தது. பொதுப்பணித்துறையின் ஒப்புதல் ஓரிரு நாளில் கிடைத்ததும் உடனடியாக பணிகளை மேற்கொள்ள வேல்முருகனுக்கு அனுமதி வழங்கப்படும். அதேபோல் கும்பாபிேஷகம் அடுத்தாண்டு நடத்தப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டுதல் குழு கடந்த மாதம் கோயிலில் ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கியது. எனவே வீரவசந்தராயர் மண்டப சீரமைப்பு பணியோடு கும்பாபிேஷக திருப்பணிகளும் துவங்கப்பட உள்ளன. சித்திரை திருவிழாவுக்கு பின் பணிகளை துவக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.