கடலுார் : கடலுார் பகுதி பெருமாள் கோவில்களில் ராமநவமி சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. கடலுார், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ராம நவமியொட்டி நேற்று ராமர், லட்சுமணன், சீதை, ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் முடிந்து தீபாரானை நடந்தது. தொடர்ந்து சேவை சாற்றுமுறை நடந்தது.
புதுப்பாளையம் செங்கமலவல்லி தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் ராம நவமியொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 13 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட இந்திர விமானத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.கடலுார் வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஜி.ஆர்.கே., எஸ்டேட் நிறுவனம் சார்பில் திருமஞ்சனம் நடந்தது. அரிசிபெரியாங்குப்பம் சக்கரத்தாழ்வார், செம்மண்டலம் சாந்த ஆஞ்சநேயர் கோவில், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவிலிலும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தோட்டப்பட்டு 42 ஆடி உயர காரியசித்தி ஆஞ்சநயேருக்கு வடை மாலை, பட்டு வாஸ்திரம் சாற்றினர். உற்சவருக்கு திருமஞ்சனம் நடந்தது.