புதுச்சேரி : ரெட்டியார்பாளையம் சீரடி மகாராஜா சாய் கோவிலில் ராம நவமி விழா நடந்தது. ரெட்டியார்பாளையம் புதிய பைபாஸ் ரோட்டில், சீரடி மகாராஜா சாய் அமைந்துள்ளது. இக் கோவிலில் ராம நவமி விழா நேற்று காலை 7.௦௦ மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 8.௦௦ மணிக்கு சிறப்பு அபிஷேகம், 10.௦௦ மணிக்கு சாய்பாபாவுக்கு பாலாபிஷேகம் நடந்தது. 11.௦௦ மணிக்கு பல்லக்கு உற்சவம், 12.௦௦ மணிக்கு ஆரத்தி, மதியம் 1.௦௦ மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இரவு 8.30 மணிக்கு ஆரத்தி நடந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.