Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் காளியம்மன் கோவில் திருவிழா வடபழனி முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு வடபழனி முருகன் கோவிலில் தமிழ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனந்தவல்லி சோமநாதர் திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
ஆனந்தவல்லி சோமநாதர் திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

14 ஏப்
2022
03:04

மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துங்கியது.விழா நாட்களின் போது அம்மனும்,சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்திற்காக ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி பிரியாவிடையுடன் சர்வ அலங்காரங்களுடன் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பொன்னம்பலம் பிள்ளை மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சக்கரை, ராஜேஷ்,குமார், பரத்வாஜ் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் யாகம் வளர்த்து திருக்கல்யாணத்திற்கான பூஜைகளை செய்த பின்னர் சிவாச்சாரியார்கள் மாலைகளை மாற்றிக் கொண்டனர். காலை 11:25 மணிக்கு சோமநாதர் சுவாமியிடம் இருந்து பெற்ற திருமாங்கல்யத்தை ஆனந்தவல்லி அம்மனுக்கு அணிவித்தனர். அதே நேரத்தில் கோயிலில் திரண்டிருந்த ஏராளமான பெண்கள் தங்களது திருமாங்கல்யத்தையும் மாற்றிக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றன.கோயில் வளாகத்திற்குள் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியை பக்தர்கள் காண்பதற்கு வசதியாக கோயிலின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த அகன்ற திரையில் நேரடி காட்சிகளாக ஒளிபரப்பினர்.திருக்கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை பொன்னம்பலம் பிள்ளை மண்டகப்படிதார்கள், சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்தினர் உள்பட பலர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களிடமிருந்து திருக்கல்யாண மொய் வசூல் செய்யப்பட்டது.விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் எஸ்பி செந்தில்குமார்,மானாமதுரை போலீஸ் டி.எஸ்.பி., சுந்தரமாணிக்கம் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar