பதிவு செய்த நாள்
16
ஏப்
2022
01:04
கோத்தகிரி: கோத்தகிரி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில், உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. கோத்தகிரி கடைவீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் வருடாந்திர திருவிழா, 13 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நாள்தோறும் அதிகாலை அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜையும், பகல், 1:00 மணிக்கு, அன்னதானமும் நடந்து வருகிறது. விழாவில், நாள்தோறும் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதி பக்தர்கள் அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். இவ் விழாவின் ஒரு நிகழ்ச்சியாக, இன்று (15ம் தேதி) மாலை, 4:30 மணிக்கு, உலக அமைதிக்காகவும், மழை வேண்டியும் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், திரளான மகளிர் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.