Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக அமைதிக்காக 108 திருவிளக்கு பூஜை ராமேஸ்வரத்தில் பிரம்மாண்ட ஹனுமன் சிலை; பிரதமர் ராமேஸ்வரத்தில் பிரம்மாண்ட ஹனுமன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போடியில் கோவிந்தா கோஷத்துடன் ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
போடியில் கோவிந்தா கோஷத்துடன் ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

பதிவு செய்த நாள்

16 ஏப்
2022
01:04

போடி: போடியில் சீனிவாசப் பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வேடத்தில் மஞ்சள் பட்டு உடுத்தி கோவிந்தா ... கோவிந்தா .... கோபாலா... என்ற கோஷத்துடன் கொட்டகுடி ஆற்றில் இறங்கினார். இந்த ஆண்டு சித்திரை மாதம் குரு ஆதிக்கத்தில் பிறந்துள்ளது. குருவுக்கு மஞ்சள் பட்டு உகந்ததாகும். மஞ்சள் அனைவருக்கும் சுபிட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதனையொட்டி இன்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் 5 அடி உயரத்தில் புதிதாக செய்யப்பட்ட தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வேடத்தில் மஞ்சள் பட்டு உடுத்தி அரோகரா .... கோவிந்தா .... கோபாலா.... என்ற கோஷத்துடன் காலை 6 மணியளவில் கொட்டகுடி ஆற்றில் இறங்கினார். அதன் பின் புதூர், நகராட்சி அலுவலகம் ரோடு, தேனி ரோடு, கீழத்தெரு உள்ளிட்ட தெருக்களில் சுவாமி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா நாயுடு மற்றும் நாயக்கர் மத்திய சங்க முன்னாள் தலைவர் குமரன் தலைமையில் நடந்தது. ஜமீன்தார் வடமலை ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். சீனிவாசப் பெருமாள் அன்னதான அறக்கட்டளை தலைவர் பாண்டி , செயலாளர்கள் பிச்சைமணி, ராஜா, பொருளாளர் கணேசன், நாயுடு மற்றும் நாயக்கர் சங்க இளைஞர் அணியினர், மத்திய சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுவாமி அலங்காரங்களை கார்த்திக் பட்டாச்சியர் குழுவினர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கள்ளழகர் வேடத்தில் இருந்த சீனிவாச பெருமாளின் அருளாசி பெற்றனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் சுரேஷ் செய்திருந்தார்.

* உப்புக்கோட்டை வரதராஜப் பெருமாள், உப்பார்பட்டி சுந்தரராஜப் பெருமாள் முல்லை ஆற்றில் பக்தர்கள் பரவசத்துடன் கள்ளழகர் வேடத்தில் பச்சைப்பட்டு உடுத்தி முல்லை ஆற்றில் இறங்கினார். உப்புக்கோட்டை, உப்பார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

* போடி அருகே தீர்த்தத்தொட்டி சித்திர புத்திரனார் கோயிலில் சித்திர புத்திரனார், சீலைக்காரி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. சித்திர புத்திரனார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar