பாலமேடு: பாலமேடு அருகே முடுவார்பட்டியில் தேவசேரி, எர்ரம்பட்டி பங்காளிகளின் அழகுமலையான், சீலைக்காரி அம்மன் கோயில் திரி வளர்ப்பு உற்சவ விழா 4 நாட்கள் நடந்தது.கிராம கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்தனர். கிராம மக்களிடம் தானிய விதைப்பு வாங்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். மதுரை வரும் கள்ளழகரை வரவேற்க நேற்று இரவு அழகர், கருப்பணசாமி வேடத்தில் சாமியாடிகள் திரி மற்றும் விதைப்புடன் புறப்பட்டு சென்றனர்.