திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீப தூணுக்கு மூங்கில் தடுப்புகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2025 11:11
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணை சுற்றி மூங்கில் தடுப்புகள் அமைத்து பாதுகாக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நவ. 25அன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக டிச. 3ல் மலை மேல் உச்சிப் பிள்ளையார் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின் மேல் கோயில் சார்பில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக பல்வேறு ஹிந்து அமைப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்காக ஆர்ப்பாட்டமும் நடத்துகின்றனர். அதனால் மலை உச்சியிலுள்ள தீப தூணுக்கு மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக கோயிலில் கார்த்திகை மகா தீபத்திற்கான கொடியேற்றம் முடிந்த பின்பு தான் தீபத்தூணில் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்படும். இந்த ஆண்டு முன்கூட்டியே அமைக்கப்பட்டுள்ளது.