மயிலாடுதுறை: சித்ரா பௌர்ணமியையொட்டி அம்மனுக்கு இசை அஞ்சலி இசை அஞ்சலி செலுத்தினர்.
சித்ரா பௌர்ணமியையொட்டி மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற இசைவிழாவில் மாணவ, மாணவிகள் அம்மனுக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.
மயிலாடுதுறை வட்டம் சோழம்பேட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலில் சித்ரா பௌர்ணமி பெருவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காலையில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து, அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மதியம் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இரவு மயிலாடுதுறை ஸ்ரீதியாகப்ரூம்மம் குரலிசைக் கலைக்கூடம் சார்பில் நடத்தப்பட்ட கர்நாடக இன்னிசைக் கச்சேரியில், அதன் ஆசிரியர் கே.என்.கார்த்திக் தலைமையிலான மாணவ, மாணவிகள் பங்கேற்று, கேதாரம், மோகனம், நாட்டை ராகங்களில் அமைந்துள்ள பாடல்களை பாடி அம்மனுக்கு இசை அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிகளை சோழம்பேட்டை ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி நற்பணி மன்ற நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தி, இசை நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.