அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பூப்பல்லக்கு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2022 07:04
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி,ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதி மண்டகப்படி நடந்தது. 9 வது நாளாக நேற்று அக்னி சட்டி ஏந்தி, பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். பத்தாம் நாள் விழாவாக தேர்த்திருவிழா நடந்தது. நேற்று இரவு அம்மன் பூப்பல்லக்கில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர்.