உளுந்தூர்பேட்டை: பு.கொணலவாடி கிராம ஸ்ரீ பச்சைவாழி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா பு.கொணலவாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பச்சைவாழி அம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று நடந்தது. அதனையொட்டி கடந்த 5ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. பின்னர் தினசரி சுவாமி வீதிஉலா நடந்தது. நேற்று மதியம் 1 மணியளவில் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் வைக்கப்பட்டு தேரோட்டம் நடந்தது. தேரினை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். இதில் பு.கொணலவடி, செல்லூர், நெமிலி, பாண்டூர், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.